த.மா.கா. சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் வாசன், பிரதமர் கனவு கண்ட பலர், தற்போது தங்களது விலாசத்தை இழந்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவில் அதிமுக ஆட்சியை தக்க வைத்ததில் த.மா.கா.வின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.