kamalhassanMp | tamilnadu தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை.. கமல்ஹாசன் எம்பி சொன்ன பரபர கருத்து
மாநில கல்விக் கொள்கை - கமல்ஹாசன் எம்.பி பாராட்டு
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு நடிகரும், எம்பியுமான
கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கல்விக்கொள்கை, சமத்துவம், சமூகநீதியை போதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை என கூறியுள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த முன்னாள் நீதிபதி த.முருகேசன் ஆகியோருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்
