கமலா ஹாரிஸ் பெயரை சொல்லி கொதிக்கும் டிரம்ப்...அனல் வீசும் வல்லரசு தேர்தல்

கமலா ஹாரிஸ் ஒரு பொய்யர் என டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் அரிசோனாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்ஸை ஒரு பொய்யர் என விமர்சித்த டிரம்ப், அவருக்கு எல்லை விவகாரம், பண வீக்கம் என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது தன்னை பற்றியே கவலைப் படுகிறார் என சாடினார். விரைவில் நேருக்கு நேர் இருவரும் விவாதம் நடத்த உள்ள நிலையில், சமீபத்திய பிரசாரங்கள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com