மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது போல் அரசியலும் கற்றுக்கொண்டால் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடலூர் சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது எதிர்கால இந்தியா மாணவர்கள் கையில் உள்ளதாக தெரிவித்தார். பள்ளியில், அரசியல் கல்வி கற்றுக் கொடுப்பது முக்கியமான ஒன்றாக இருப்பதாக தெரிவித்த அவர், அரசியலை கேவலமாக பார்க்காமல், கருவியாக பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.