மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் சிறைபிடித்து பா.ஜ.க. வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.