காளையார்கோவிலில் 150 பாஜகவினர் மீது பாய்ந்த வழக்கு

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக பாஜகவை சேர்ந்த 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து, மர்ம நபர்கள் 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையத்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்காத காவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தரப்பில் 8 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com