Kadayanallur | ADMK | TN Election | கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி வேட்பு மனு தாக்கல்
Kadayanallur | ADMK | TN Election | கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி வேட்பு மனு தாக்கல் #kadayanallur #admk #tenkasi #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி வேட்பு மனு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும், அதிமுக வேட்பாளருமான கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடையநல்லூர் மணிக்கூண்டில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மேள தாளங்கள் முழங்கத் தொண்டர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் சால்வை மற்றும் மாலைகளைப் பெற்றுக்கொண்ட அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார். இதில் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ண முரளி, மண்ணின் மைந்தரான தனக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவும், எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பதிலேயே போட்டி எனவும் தெரிவித்தார்....
