இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை அகற்றம்

சங்கராபுரம் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
x

இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை அகற்றம்

சங்கராபுரம் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தொழிவந்தாங்கல் கிராமத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு எம்ஜிஆர் சிலை அருகே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை இரவோடு இரவாக போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்