தமிழக அரசின் கைக்கு வரும் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள்
தமிழக அரசின் கைக்கு வரும் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற கருவூலத்தில் இருந்த தங்க வைர நகைகள், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற கருவூலத்தில் உள்ள 481 வகையான பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையாக, முதல் நாளில் 285 பொருட்கள் சரிபார்க்கப்பட்டது. அவை சீலிடப்பட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பொருட்களும் சரிபார்க்கப்பட்டு, இன்றைய தினம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story