தனக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா இறந்துவிட்டதால் வழக்குகளை தள்ளுபடி செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை 4 வாரத்தில் தாக்கல் செய்ய விஜயகாந்திற்கு உத்தரவிட்டுள்ளது.