"ஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை, எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்..? - தினகரன் பதிலடி

10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியிட்ட கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பதிலடி கொடுத்துள்ளது.

10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என

அமைச்சர் டி. ஜெயக்குமார், வெளியிட்ட கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பதிலடி கொடுத்துள்ளது. பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முற்றிலும் உண்மைக்கு புறம்பாக பேசுவதே, டி. ஜெயக்குமாரின் வாடிக்கை என்றார். ஒரு தினகரனையே சமாளிக்க முடியாதவர்களால் எப்படி, ஆயிரம் தினகரன்களை சமாளிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

" சசிகலா நல்ல உடல் நலத்துடன் உள்ளார்" - டி.டி.வி தினகரன் தகவல்

சசிகலாவுக்கு உடல் நலம் சரி இல்லை என வெளிவந்த செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்தார். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சிறையில்

சசிகலா நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்றும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com