"திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக ஓ.பி.எஸ் செயல்படுகிறார்" பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார்

x

திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர், மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். மேலும், திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக கூறிய ஜெயக்குமார், திமுகவை வளர்க்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் எண்ணமாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்