``ஜெய் ஸ்ரீராம்'' சர்ச்சை. ``அரசியலமைப்பை மதிக்காத ஆளுநர்.. ''மனோ தங்கராஜ் காட்டம் || Manothangaraj
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை என, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் கல்லூரி விழாவில் பேசிய ஆளுநர் ரவி, ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதோடு, மாணவர்களையும் கூற வைத்தது சர்ச்சையானது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில், ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருப்பதாகவும்,இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள், எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்? என்றும் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
