Jagannath Mishra | ஜெகநாத் மிஸ்ரா பிறந்தநாள் விழா - ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் P.L.A. ஜெகநாத்மிஸ்ரா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கட்சி அலுவலகத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில்
50 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ந.ம.மு.க சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். அதேபோல
ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
Next Story
