Jagan Moorthy | AIADMK | EPS | எத்தனை தொகுதி? - ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் உடைத்து சொன்ன ஜெகன் மூர்த்தி
எத்தனை தொகுதி? - ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் உடைத்து சொன்ன ஜெகன் மூர்த்தி
அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு உள்ளது என, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு, ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5 தனித் தொகுதிகளை, குறிப்பாக கே.வி.குப்பம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளை வழங்கக் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது இல்லத்தரசிகளுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்.
