உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஆந்திர முதல்வர் புகார் மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 8 பக்க புகார் மனு

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் மனு அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஆந்திர முதல்வர் புகார் மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 8 பக்க புகார் மனு
Published on

புகார் மனுவில், அமராவதி தலைநகரின் நில முறைகேடு வழக்கிலும், மூன்று தலைநகர வழக்கிலும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தலையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பல்வேறு வழக்குகளில், அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இது தொடர்பாக 8 பக்க குற்றச்சாட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந் பாப்பேக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், செய்தியாளர்களை சந்தித்த அரசு தலைமை ஆலோசகர் அஜய் கலாம், மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com