"கவுண்டர்களில் எடுத்த ரயில் டிக்கெட்டை IRCTCயில் ரத்து செய்யலாம்"
முன்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டை IRCTC இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது 139 என்ற எண்ணிற்கு அழைத்தோ ரத்து செய்து கொள்ளலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அவர், முன்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட அசல் டிக்கெட்டை பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் IRCTC வலைத்தளம் அல்லது 139 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து ரத்து செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். முன்பதிவு கவுண்டர்களில் அசல் முன்பதிவு டிக்கெட்டை ஒப்படைத்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
