வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்
Published on

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தற்போதைய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், இந்த வெற்றியில் அனைவருக்கும் உரிமை உண்டு எனவும், ஒற்றுமையோடு செயல்பட்டதால் வெற்றி கிடைத்திருப்பதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மே 9 வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், ஊரடங்கு தேவையா இல்லையா என்பது வரும் 10-ஆம் தேதிக்கு பின்பு ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பிறகு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய அவர், இடது ஜனநாயக முன்னணியின் புதிய அரசு அமைப்பது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com