ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்
Published on
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். முன்னதாக கொனார்க் போர் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com