மின் கட்டண உயர்வு.. - I.N.D.I.A கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.. - ஸ்தம்பித்த புதுவை

மின் கட்டண உயர்வு.. - I.N.D.I.A கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.. - ஸ்தம்பித்த புதுவை
Published on

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் மின் கட்டணம் கடந்த வாரம் முதல் உயர்த்தப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சிவா தலைமையில் ஊர்வலமாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஊர்வலத்தில் புதுவை முன்னாள் முதல்வர் நாராயண சாமி, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் - தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பு அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது தடுப்புகளை மீறி போராட்டகாரர்கள் செல்ல முயன்றதால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையை கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாராயணசாமி, சிவா, வைத்திலிங்கம் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com