அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
