திடீரென வகுப்ப​றை முழுவதும் பசுஞ்சாணத்தால் மெழுகிய கல்லூரி முதல்வர்

x

டெல்லியில், கல்லூரி வகுப்பறையை, கல்லூரி முதல்வர், பசுஞ்சாணம் கொண்டு மெழுகிய காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் பிரத்யுஷ் வத்சலா என்பவர், வகுப்பறை சுவரை பசுஞ்சாணத்தால் மெழுகியுள்ளார்.

வெப்ப அழுத்தக் கட்டுப்பாடு பற்றி ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறும் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி என கல்லூரி முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், வகுப்பறையை பசுஞ்சாணத்தால் மெழுகிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்