நியமன எம்.பி.யாகிறார், இளையராஜா..! நியமன எம்.பி. தேர்வு எப்படி? இவர்களின் அதிகாரங்கள் என்ன..?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 145 ஆக இருக்கிறது...
x

நியமன எம்.பி.யாகிறார், இளையராஜா..! நியமன எம்.பி. தேர்வு எப்படி? இவர்களின் அதிகாரங்கள் என்ன..?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 145 ஆக இருக்கிறது. இதில் 233 எம்.பி.க்கள், மாநில எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்படும் நிலையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 80-ன் கீழ், 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் நடிகர்கள் சிவாஜி கணேசன், சோ ராமசாமி, நடிகை ரேகா, சச்சின் டெண்டுல்கர், மேரி கோம் உள்ளிட்டோர் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போது மாநிலங்களவை நியமன எம்.பி. பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அரசு பரிந்துள்ளது. அவருடன் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, இயக்குநர் ராஜமவுலியின் தந்தை திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக செயற்பாட்டாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

நியமன எம்.பி.க்கள் அதிகாரத்தை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு கிடைக்கும் அனைத்து அதிகாரங்களையும், சலுகைகளையும், விலக்குகளையும் நியமன உறுப்பினர்கள் பெறுகிறார்கள்.

அவர்கள் மற்ற உறுப்பினர்களை போல மாநிலங்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும். இருப்பினும் அவர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் அவர்கள் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். நியமன எம்.பி.க்களின் பதவிக்காலமும் 6 வருடங்கள் தான். ராஜினாமா, இறப்பு, தகுதி நீக்கம் காரணமாக ஏற்படும் காலியிடங்களுக்கு, முன்பு இருந்தவர்களின் எஞ்சிய பதவி காலத்திற்கு மட்டும், வேறு ஒருவர் சேவை செய்யலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 99 , நியமன உறுப்பினர் ஒருவர், நியமிக்கப் பெற்ற ஆறு மாதங்களுக்குள் ஒரு அரசியல் கட்சியில் சேர அனுமதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்