"திருடன் நல்லவனாக மாறினால் மன்னிக்க மாட்டார்களா?"கூட்டணி குறித்து பொன்னையன் பேச்சு

x

அதிமுக பாஜக கூட்டணியின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, , திருடன் நல்லவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா, அதுபோல பாஜகவினர் நல்லவர்களாக மாறலாம் எனத் தெரிவித்தார். மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே தமிழகத்தின் மானம் காக்கப்படும் எனவும் பொன்னையன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்