Lalgudi | Leema Rose Martin | "லால்குடியை நம்பர் 1 தொகுதியாக மாற்றுவேன்.." - லீமா ரோஸ் மார்ட்டின்

"லால்குடியை நம்பர் 1 தொகுதியாக மாற்றுவேன்.." - லீமா ரோஸ் மார்ட்டின்

Lalgudi | Leema Rose Martin | "லால்குடியை தத்தெடுத்து.. தமிழகத்திலேயே நம்பர் 1 தொகுதியாக மாற்றுவேன்.." லீமா ரோஸ் மார்ட்டின் உறுதி #Trichy #AIADMK #Lalgudi #LeemaRoseMartin திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், ஆதரவாளர்கள் புடைசூழத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லால்குடி தொகுதியை தத்தெடுத்து தமிழகத்திலேயே முதன்மைத் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என உறுதி அளித்தார். மார்ட்டின் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே பல்வேறு மக்கள் சேவைகளைச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இடையாற்றுமங்கலம் - கிளிக்கூடு பாலத்தை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தார். தனிப்பட்ட முறையில் நிலம் வாங்கி நவீன மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தித் தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com