``தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திப்பேன்..'' - திமுக.வினருக்கு CM ஸ்டாலின் கடிதம்
இதுகுறித்து தி.மு.க.வினருக்கு எழுதியுள்ள மடலில், தி.மு.க பொதுக்குழு மதுரையில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, வரலாற்றில் முத்திரை பதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தை கேட்டு, அதனை விரைவுபடுத்த உத்தரவிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர்,
துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி,
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வையும் அதனுடன் கூட்டணி வைத்துத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க.வையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி,
தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சியினரின் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்
