``நான் உண்மையான காங்கிரஸ்காரன்’’ - சர்ச்சைக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதாகத் திட்டமிட்டுக் கிளப்பப்படும் வதந்திகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆட்சியில் பங்கு குறித்து அவர் பேசிய கருத்துகளால் சர்ச்சை எழுந்த நிலையில், 'அற்பத்தனமான ஐடி விங்கின் கனவு பலிக்காது, நான் உண்மையான காங்கிரஸ்காரன்' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக நிர்வாகிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
