Hosur | TN Election | 5 மணிநேரம்.. பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் இறங்கி அலசிய பறக்கும் படை

5 மணிநேரம்.. பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் இறங்கி அலசிய பறக்கும் படை

Hosur | TN Election | 5 மணிநேரம்.. பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் இறங்கி அலசிய பறக்கும் படை #Hosur #FlyingSquad #tnelection #election2026 #thanthitv ஓசூரில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர். பாஜக நிர்வாகி சீனிவாசன் மற்றும் அவரது மகன் அதிமுக நிர்வாகி பிரசாந்த் ஆகியோரின் அடுக்கு மாடி வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினர். நீண்ட நேரச் சோதனையில் சில காலி அட்டைப் பெட்டிகள் மட்டுமே சிக்கிய நிலையில், வேறு எந்தப் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com