இணையத்தில் பரவிய வீடியோ... சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த விஷயம்

x

இணையத்தில் பரவிய வீடியோ... சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த விஷயம்

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு..., அதில் கைவைப்பது ஆபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க.வினருக்கு எழுதியுள்ள மடலில், கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால், அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும்... நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை மத்திய அரசு தீவிரமாக மேற்கொள்வதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கன்னடத்தை புறக்கணித்து இந்தியை திணிப்பவர்களை ஏற்க மாட்டோம் என்று கூறி கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி, சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்