"நீதித்துறையினரே நீதிபதிகள் குறித்து விமர்சனம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை

நீதித்துறையை சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
"நீதித்துறையினரே நீதிபதிகள் குறித்து விமர்சனம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை
Published on

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேட்டியளித்துள்ளதாகவும்,

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் முன் முறையிட்டார். அப்போது அவர், நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் விமர்சனம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, நீதித் துறை சார்ந்தவர்களே, தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித் துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும் என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com