Highcourt ``சொத்துகள் முடக்கம்?’’ - ED விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரிகளை அணுக அமைச்சர் பெரியசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2006-11 ல் அமைச்சராக பதவி வகித்த போது ரூ.2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்க துறை அமைச்சர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்ததது.
இந்த நோட்டீசை எதிர்த்து அமைச்சர் பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story
