

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதியமைச்சர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செல்போன், ஜ வுளி, காலணி, உரம், சூரிய சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், லாட்டரி சீட்டு பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும், ஜிஎஸ்டி வரி பிடித்தத்தை திரும்ப பெறும் புதிய முறையை எளிமைப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில், வரி உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.