தீர்ப்புக்கு பின் 2 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த முடிவால் திருப்பம்

x

சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 8 தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், ஏப்ரல் 11ம் தேதி தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்ட நிலையில் ஆளுநர் ஏப்ரல்.9-ல் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்