அச்சு இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

புத்தக தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 6ஆவது இடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
அச்சு இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
Published on
புத்தக தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 6ஆவது இடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், அச்சு இயந்திரங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அச்சு ஊடகத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக கூறினார். மேலும், ஆங்கிலப்புத்தகம் தயாரிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2 வது இடம் வகிப்பதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com