"போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - த.மா.கா.தலைவர் வாசன்

பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
"போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - த.மா.கா.தலைவர் வாசன்
Published on
பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் 25 லட்சம் பயணிகள் அரசு போக்குவரத்து கழக​ பேருந்துகளை பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும், நாள்தோறும் 9 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் மற்றும் ஊழியர் நலன் காக்க அரசு முன்வர வேண்டும் என வாசன் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com