GK வாசன் சொன்ன கருத்தால் திடீர் பரபரப்பு

x

எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்களை போல, தமிழ்நாடும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு இணக்கமாக சென்று திட்டங்களை பெற வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பேசிய அவர், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி எனவும், தமிழக அரசும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு இணக்கமாக செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தனியார் பத்திரிகையின் கேலி சித்திர விவகாரம் நாட்டிற்கே அவமானம் எனக் கூறிய அவர், பத்திரிகைகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்