

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அவர் பேசினார். அப்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலை செயற்கை தேர்தலாக திமுக மாற்றி விட்டதாக தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாசன் கூறினார்.