Ganapathy Sivakumar | தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் கண்டனம்

Ganapathy Sivakumar | தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் கண்டனம்

Ganapathy Sivakumar | தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் கண்டனம்

தமிழ்நாடு வருகை தரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாமல்லபுரம் அருகே கோவளத்தில் நடைபெறும் தென் மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.. இந்நிலையில், அவரின் வருகைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தென் மாநிலங்களுக்கு இடையேயான நீராதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியைத் திணிக்கும் முயற்சி, இருமொழிக் கொள்கைக்கு எதிரான போக்கு மற்றும் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் ஆகியவை குறித்து அமித்ஷாவிடம் என்ன பதில் உள்ளது எனவும் அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு சிதைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டின் நலன்களுக்கு தொடர்ந்து விரோதமாகச் செயல்பட்டு வரும் அமித்ஷா எந்த முகத்தோடு தமிழகத்திற்கு வருகிறார்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com