Congress | Ganapathy Sivakumar | இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கணபதி சிவக்குமார் கேள்வி

இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கணபதி சிவக்குமார் கேள்வி

Congress | Ganapathy Sivakumar | இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கணபதி சிவக்குமார் கேள்வி #congress #ganapathysivakumar #thanthitv இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கணபதி சிவக்குமார் கேள்வி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துக்காக மத்திய பாஜக அரசு எடுக்க உள்ள உறுதியான நடவடிக்கைகள் என்ன? என காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "Chhatron Ki Goonj" நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் மாணவர்களுடன் நேரடியாக உரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், வேலைவாய்ப்பு, நியாயமான ஆட்சேர்ப்பு, வினாத்தாள் கசிவில்லாத தேர்வு முறை, அனைவருக்கும் எட்டக்கூடிய கல்வி மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு எதிர்கால கவலைகளை வெளிப்படுத்தியதாக கணபதி சிவக்குமார் கூறியுள்ளார். மேலும், Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினருக்கு தேசப்பற்று சான்றிதழ் தேவையில்லை என்றும், முழக்கங்கள், கொடிகள் மற்றும் விசுவாசச் சோதனைகள் மூலம் அவர்களின் தேசப்பற்றை அளவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுடன் போட்டியிடக்கூடிய இந்தியாவையும், அதற்குத் தேவையான கல்வி, திறன் மற்றும் வாய்ப்புகளையும் இளைஞர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள கணபதி சிவக்குமார், இளைஞர்களின் கல்வி, திறன் மற்றும் எதிர்காலத் தயார்நிலையை மேம்படுத்த பாஜக அரசு எடுக்க உள்ள உறுதியான நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com