"அமைச்சர் காந்தி தவறாக திசை திருப்புகிறார்"...இலவச வேட்டிக்கு 78% பாலியஸ்டர் - அண்ணாமலை பேச்சு

பொங்கல் தொகுப்பு இலவச வேட்டியை நெய்ய பாலியஸ்டர் நூல் பயன்படுத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் காந்தி 2003ஆம் ஆண்டு அரசாணையை காட்டி தவறாக திசை திருப்புவதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு வரை வேட்டியில் வார்ப் பகுதியை நெய்ய 100 சதவீதம் பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com