இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
Published on
கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், கவலையையும் உண்டாக்கி கல்வி திறனை பாதிக்கும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொள்முதல் பணிகளை உடனடியாக தொடங்கி பொங்கல் திருநாளுக்குள் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com