அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி

x

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்தார். கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மோர், தார்பூசனி, கிர்னி பழம், பலாபழம், வாழைபழம் உள்பட பழங்களை ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று, பொதுமக்களுக்கு, பழங்கள், ஜூஸ்களை வழங்கினர். பின்னர், தூய்மை பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கும் அதிமுக நிர்வாகிகள் குடை வழங்கினர்


Next Story

மேலும் செய்திகள்