"இரவில் ஓடும் அணிலை கண்டுபிடியுங்க.." - தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்

x

எந்த தடைகளையும் தாண்டுவோம் எனக் கூறும் தி.மு.க அரசு மின் தடையை கூட தாண்டவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் பகலில் ஓடிக்கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இரவில் ஓடும் அணிலை கண்டுபிடித்து மின்தடையை சரி செய்ய வேண்டும் என வலியுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்