Felix | Vijay Stampede | விஜய் பிரசார மரண விவகாரம் - ஃபெலிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. த.வெ.க தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதை மேற்கோள்காட்டி அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம், வரும் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது.
Next Story
