``பாக்குறதுக்கு சந்தோஷமா இருக்கு; வாழ்த்துகள்’’ தவெக குறித்து குஷ்பு
பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி- குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமனம்
பாஜக மாநில துணைத் தலைவர்களாக குஷ்பு உள்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். அதில் எம். சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என்.சுந்தர் ஆகிய 14 மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச் செயலாளர்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம்.முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணிக்கு பொறுப்பு வழங்கப்படாததால் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளார். தேசிய அளவிலான பொறுப்பு தனக்கு வழங்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட முடிவை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
