Tiruppur | அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு
Tiruppur | அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு #admk #tiruppur #tnelection2026 #tnpolitics #thanthitv திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தூரம்பாடி பகுதிக்கு சத்தியபாமா வாக்கு சேகரிக்க சென்ற போது, விவசாயிகள் நெல் கதிர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், இப்பகுதியில் அதிகமாக விளையும் முருங்கைக்காய்க்கு பதப்படுத்தும் கிடங்கு மற்றும் பவுடர் ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்காக புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் அதிமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
