ராஜேந்திர பாலாஜி வழக்கு ..உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரின் இசைவாணைக்கு காத்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு இசைவாணை கோப்பு குறித்து மார்ச் 17-ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு ஆளுநரின் முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Next Story
