"4000 ஆண்டுகள் புகழ்பெற்ற தமிழை அழிப்பதா.." - கொந்தளித்த அமைச்சர் எ.வ.வேலு
4000 ஆண்டுகள் புகழ் பெற்ற நம் தமிழை 500 ஆண்டுகள் மட்டுமே கொண்ட இந்தி மொழி வந்து அழிப்பதா? என அமைச்சர் எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார்.
வாணியம்பாடியில் நடைபெற்ற முத்தமிழ் மன்ற விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மாங்குயிலே , தேங்குயிலே சேதி ஒன்னு கேளு,
என்ற பாடலை மேடையில் பாடி, பேசத்தொடங்கிய அவர், 4,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழியை 500 ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தி மொழி அழிப்பதா? என கேள்வியெழுப்பினார். தமிழுக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் ஒவ்வொரு தமிழனும் வந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story