"ஒவ்வொரு வீட்டு பெண்களும், ஆண்களும் இதை கவனிங்க..." பாஜக தலைவர் நயினார் அதிரடி பேச்சு
வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், அமைச்சர் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நெல்லை சந்திப்பில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.
Next Story