"Chairman-க்கு கூட வண்டி இல்லை" சிரித்தபடி அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த நச் பதில்

குரோம்பேட்டையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பல்வேறு புகார்களை கூறியுள்ளனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்ற தனியார் நிகழ்வில், கே.என்.நேரு பங்கேற்றார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி மற்றும் சிலர், தாம்பரம் மாநகராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடக்கவில்லை என்றதோடு, அடுக்கடுக்கான புகார்ளை தெரிவித்தனர். அவற்றை பொறுமையுடன் கேட்ட அமைச்சர் நேரு, புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com